வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபர் கைது
கூத்தாநல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கூத்தாநல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நகை திருட்டு
கூத்தாநல்லூர் அருகே உள்ள அதங்குடி, தெற்குசேத்தி கிராமத்தில் வசித்து வருபவர் நந்தகுமார்(வயது40). எலக்ட்ரீசியனான இவர் நேற்று முன்தினம் காலை தனது வீட்டை பூட்டிவிட்டு, அதே தெருவில் உள்ள ஒருவருடைய வீட்டில் வேலை பார்த்தார். சிறிது நேரம் கழித்து நந்தகுமார் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் வீட்டின் உள்ளே சென்றாா். அப்போது வீட்டுக்குள் ஒருவர் நிற்பது தெரியவந்தது. அவரை சுற்றி வளைத்து நந்தகுமார் பிடிக்க முயன்ற போது அந்த நபர்
நந்தகுமாரை தள்ளி விட்டு தப்பிஒடி விட்டார். மேலும் அந்த நபர் வீட்டில் இருந்த 4 பவுன் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.
கைது
இது குறித்து கூத்தாநல்லூர் போலீசில் நந்தகுமார் புகார் அளித்தாா். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இந்தநிலையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி நகைகளை திருடி சென்ற மரக்கடை, வள்ளுவர் காலனி கீழத்தெருவை சேர்ந்த வெங்கடேசை(24) கைது செய்தனர். வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிய வாலிபரை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.