2 மாணவிகளை பலாத்காரம் செய்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 மாணவிகளை பலாத்காரம் செய்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 19 Jun 2023 12:15 AM IST (Updated: 19 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் 2 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பாலியல் பலாத்காரம்

நாகர்கோவில் பார்வதிபுரம் அண்ணா தெருவை சேர்ந்தவர் விக்கி என்ற விக்னேஸ்வரன் (வயது 21), தொழிலாளி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு பள்ளி மாணவி ஒருவரை காதலிப்பது போல் நடித்து நண்பனின் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மேலும் அவருடைய நண்பர்கள் 2 பேருக்கு விருந்தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் அந்த மாணவி அங்கிருந்து தப்பி வீட்டுக்கு வந்தார். இதுபற்றி பெற்றோரிடம் கூறி மாணவி கதறி அழுதார். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதற்கிடையே விக்னேஸ்வரன் மீது மற்றொரு பள்ளி மாணவியும் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார். இந்த 2 புகார்கள் அடிப்படையில் விக்னேஸ்வரன் மீது மகளிர் போலீசார் போக்சோ வழக்குகள் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

குண்டர் சட்டத்தில் கைது

இதனைத்தொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்ற அவர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து விக்னேஸ்வரனை நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.


Next Story