சாராயம் விற்ற வாலிபர் கைது


சாராயம் விற்ற வாலிபர் கைது
x

சாராயம் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

ஆலங்குடி:

ஆலங்குடி அருகே கீழாத்தூரில் நேற்று முன்தினம் நாடியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா நடைபெற்றது. அப்போது அதே கிராமம் ஜீவா நகரை சேர்ந்த செல்வராஜ் மகன் பிரபு (வயது 32) என்பவர் கோவில் அருகில் உள்ள வீட்டில் 8 லிட்டர் சாராயம் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையறிந்த ஆலங்குடி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் குணமதி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பிரபுவை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 8 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் பிரபுவை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய்பாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.


Next Story