பித்தளை குத்து விளக்கை திருடிய வாலிபர் சிறையில் அடைப்பு


பித்தளை குத்து விளக்கை திருடிய வாலிபர் சிறையில் அடைப்பு
x

பித்தளை குத்து விளக்கை திருடிய வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 30). இவருக்கு தீபா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். அசோக்குமார் ஜெராக்ஸ் எந்திரம் விற்பனை மற்றும் அதனை சர்வீஸ் செய்யும் வேலை செய்து வருகிறார். அசோக்குமார் வீட்டிற்குள் கடந்த 14-ந்தேதி இரவு மர்ம ஆசாமி ஒருவர் நுழைந்து பித்தளை குத்து விளக்கை திருடி விட்டு கதவை வெளிப்புறமாக தாழ்ப்பாளிட்டு தப்பி ஓடினார். இதனை கண்ட அசோக்குமாரின் மனைவி திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். அவரது சத்தத்தை கேட்ட அக்கம், பக்கத்தினர் அந்த மர்ம ஆசாமியை பிடிக்க பின் தொடர்ந்து ஓடினர். அப்போது பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் மர்ம ஆசாமி ஓடிய போது ஒரு பஸ்சில் மோதி காயமடைந்தார்.

இதையடுத்து அவரை பிடித்த அக்கம், பக்கத்தினர் பெரம்பலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த மர்ம ஆசாமியை போலீசார் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துமனையில் சேர்த்து விசாரித்தனர். விசாரணையில், அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், புதுகீரனூரை சேர்ந்த மாயவன் மகன் சின்ன எம்.ஜி.ஆர். (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து சிகிச்சை பெற்று குணமாகிய சின்ன எம்.ஜி.ஆர். மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.


Next Story