ஜாமீனில் வெளிேய வந்த நிலையில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது


ஜாமீனில் வெளிேய வந்த நிலையில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
x

ஜாமீனில் வெளியே வந்த நிலையில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

ஈத்தாமொழி:

ஜாமீனில் வெளியே வந்த நிலையில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

ஈத்தாமொழியை அடுத்த செம்பொன்கரை காலனியை சேர்ந்தவர் அகஸ்டின். இவருடைய மகன் அஜித் குமார் (வயது20), கல்லூரி மாணவர். இவர் சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதை அக்கம் பக்கம் தேடியும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் நங்கூரன் பிலாவிளையில் உள்ள தோப்பின் அருகே சாலையில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளை உருட்டி சென்றதை பொதுமக்கள் பார்த்தனர். இதில் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் ஈத்தாமொழி போலீசாருக்கு தகவல் ெகாடுத்தனர்.

திருட்டு வழக்கில் கைது

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் புத்தன்துறை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜகுமாரன் (23) என்பதும், அஜித்குமாரின் மோட்டார் சைக்கிளை திருடி வந்ததும் தெரிய வந்தது.

மேலும் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ராஜகுமாரன் சமீபத்தில் பாம்பன்விளையில் ஒரு மோட்டார் சைக்கிள் திருடியதாக சிறைக்கு சென்று ஜாமீனில் வெளி வந்து சில நாட்களே ஆனது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து ராஜகுமாரனை போலீசார் கைது செய்தனர். இவருக்கு வேறு ஏதாவது திருட்டு வழக்கில் ெதாடர்பு உண்டா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

---


Next Story