ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்


ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்
x
தினத்தந்தி 29 May 2023 12:15 AM IST (Updated: 29 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் தெரிவித்துளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் தெரிவித்துளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு

மத்திய அரசின் 'பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி' திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், ஜூன் முதல் வாரத்தில் வழங்கப்பட உள்ள 14-வது தவணை தொகையை பெறுவதற்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள் அல்லது தபால்காரர் அல்லது கிராம அஞ்சல் ஊழியரை அணுகி, ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையிலிருந்து பெறப்பட்ட தகவலின்படி தமிழ்நாட்டில் 2.17 லட்சம் விவசாயிகள் பாரத பிரதமர் கிசான் திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். விவசாயிகள் இந்த 14-வது தவணை தொகை பெற ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு தொடங்க அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி உதவும்.

சிறப்பு முகாம்

எனவே தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம், விவசாயிகள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி விரல் ரேகை மூலம் ஒரு சில நிமிடங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கலாம்.

இதற்காக மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையுடன் இணைந்து கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம். நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டொன்றிற்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் 'பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி' என்ற திட்டம் 2018-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் இந்த நிதி உதவி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகின்றது. திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 13 தவணைகள் விடுவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story