வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயம்


வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயம்
x

பி.எம்.கிசான் திட்டத்தில் வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயம் என வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்த 44,871 விவசாயிகளுக்கு இதுவரை 13 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற பெற விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைப்பதும், மின்னணு வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளும் இ-கே.ஒய்.சி. நடைமுறையை மேற்கொள்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மின்னனு கேஒய்சி முடிக்காத 6,646 விவசாயிகள் மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத 4,156 விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை துறை, மற்றும் அதன் சகோதர துறைகளுடன் இணைந்து (பொது சேவைமையங்கள் மற்றும் தபால் நிலைய வங்கி கிளைகளின் உதவியுடன்) கிராமம் வாரியாக சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம். அல்லது அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தையோ அல்லது தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு பயன்பெறலம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story