அஞ்சல் துறை சார்பில் ஆதார் சேவை சிறப்பு முகாம்
அஞ்சல் துறை சார்பில் ஆதார் சேவை சிறப்பு முகாம் இன்று நடக்கிறது
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய தலைமை அஞ்சலகம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 29 துணை அஞ்சலகங்களில் ஆதார் சேவை சிறப்பு முகாம் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் புதிதாக ஆதார் அட்டை எடுக்க விரும்புவோர், திருத்தங்கள் செய்ய விரும்புவோர் பயனடையலாம். மேலும் இந்த சிறப்பு முகாம்களில் அனைத்து வகையான சேமிப்பு கணக்குகளும், பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு கணக்கு மற்றும் ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் சேமிப்பு கணக்கு போன்றவை தொடங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் 2 புகைப்படம் மற்றும் ஆதார் நகலுடன் வந்து சேமிப்பு கணக்கு தொடங்கி பயன் பெறலாம். இந்த தகவலை ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
.
Related Tags :
Next Story