ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம் அடுத்த மாதம் வரை நடக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதார் சம்பந்தமான திருத்தங்கள் செய்ய அஞ்சல் துறை சார்பில் வருகிற ஜனவரி மாதம் 11-ந் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில் குழந்தைகளுக்கான புதிய ஆதார் எடுத்தல், செல்போன் எண், கை ரேகை, புகைப்படம், பிறந்த தேதி, முகவரி ஆகியவை மாற்றலாம். இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம் அரக்கோணம், நெமிலி, வாலாஜா பேட்டை, திமிரி மற்றும் சோளிங்கர் வட்டங்களில் உள்ள அஞ்சலகங்களில் விவசாயிகளுக்கான சிறப்பு ஆதார் முகாம் நடைபெற்று வருகின்றது. ஆதாரில் செல்போன் எண் இணைக்காதவர்கள் மற்றும் புதுப்பிக்க வேண்டுவோர்களுக்கு அதனை புதுப்பித்து, 3 நாட்களுக்கு பின்னர் பி.எம்.கிஸான் இணையதளத்தில் புதுப்பித்து வழங்கப்படும்.
ராணிப்பேட்டை, அரக்கோணம் தலைமை அஞ்சலகம், நெமிலி, காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், திமிரி, கலவை, சிப்காட், பெல், ஆகிய அஞ்சலகங்களில் நடைபெறும் இந்த முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரக்கோணம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.