ஞாயிற்றுக்கிழமைகளில் ஆதார் சிறப்பு முகாம்


ஞாயிற்றுக்கிழமைகளில் ஆதார் சிறப்பு முகாம்
x

ஞாயிற்றுக்கிழமைகளில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெறும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் செயல்பட்டு வரும் அனைத்து நிரந்தர ஆதார் சேவை மையங்களில் சுழற்சி முறையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படுத்த அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் வருகிற 16-ந் தேதி, 6.11.22, 4.12.22-ந் தேதிகளிலும், நெமிலி தாலுகா அலுவலகத்தில் 16-ந் தேதி, 13.11.22, 11.12.22-ந் தேதிகளிலும், ஆற்காடு தாலுகா அலுவலகத்தில் 23-ந் தேதி, 20.11.22, 18.12.22-ந் தேதிகளிலும், வாலாஜா தாலுகா அலுவலகத்தில் 30-ந் தேதி, 27.11.22, 25.12.22-ந் தேதிகளிலும், ஆதார் சேவை நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு முகாமில் ஆதார் புதிய பதிவு, 5 வயது மற்றும் 15 வயது முடிவடைந்தவர்களுக்கான கட்டாய கைவிரல் ரேகை பதிவு, பெயர், முகவரி, பிறந்த தேதி மாற்றம் செய்தல், புகைப்படம், கைவிரல், கருவிழி மாற்றம் செய்தல், ஆவணங்கள் புதுப்பித்தல் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

தற்போது அரசின் சலுகைகளை பெற ஆதார் அட்டை கட்டாயம் என்பதை கருத்தில் கொண்டு அனைவரும் ஆதாரை புதுப்பித்து வைத்துக் கொள்ளவும், நீண்ட காலமாக ஆதார் புதுப்பிக்காதவர்கள் சரியான ஆவணங்களை சமர்ப்பித்து புதுப்பித்துக் கொள்ளவும் இந்த சந்தர்ப்பத்தை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறலாம்.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story