தபால் நிலையங்களில் ஆதாருடன் செல்போன் எண்ணை இணைக்கலாம்- தபால் கோட்ட கண்காணிப்பாளர்

தபால் நிலையங்களில் ஆதாருடன் செல்போன் எண்ணை இணைக்கலாம்- தபால் கோட்ட கண்காணிப்பாளர்
x
தினத்தந்தி 20 Nov 2022 12:30 AM IST (Updated: 20 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் பயன்ெபற தபால் நிலையங்களில் ஆதாருடன் செல்போன் எண்ணை இணைக்கலாம் என நாகை தபால் கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் கூறினார்.

நாகப்பட்டினம்

விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் பயன்ெபற தபால் நிலையங்களில் ஆதாருடன் செல்போன் எண்ணை இணைக்கலாம் என நாகை தபால் கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகளுக்கு நிதி உதவி

மத்திய அரசின், பிரதம மந்திரி நிதி உதவி திட்டத்தின்கீழ், பயன்பெறும் விவசாயிகள், இத்திட்ட இணைய தளத்தில் அல்லது செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி. அங்கீகாரத்தை பயன்படுத்த வேண்டும். எனவே விவசாயிகள் அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகி ஆதாருடன் செல்போன் எண்ணை இணைத்து பயன்பெறலாம்.

தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன், பயோமெட்ரிக் கருவியின் மூலமாகவும் விவசாயிகள் தங்கள் ஆதாரில் செல்போன் எண்ணை இணைத்து கொள்ளலாம். இதற்கு ரூ.50 கட்டணமாக பெறப்படுகிறது.

சிறப்பு முகாம்கள்

மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையுடன் இணைந்து கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தியும் ஆதாருடன் செல்போன் எண்ணை இணைத்து கொள்ளலாம். இதனால் பிரதம மந்திரி நிதி உதவி திட்டத்தில் விவசாயிகள் நிதி உதவியை தொடர்ந்து பெற்று பயன்பெற முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story