வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்


வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிசான் திட்டத்தில் பயன்பெற வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் கலெக்டர் லலிதா தகவல்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பிரதமரின் கவுரவ நிதித்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு விவசாய குடும்பத்துக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளாக வழங்கி வருகிறது. இதுவரை இத்திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு 11 தவணை தொகை வரப்பெற்றுள்ளது. தற்போது விவசாயிகள் 12-வது தவணை தொகையை பெற தங்களது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் அவ்வாறு செய் துள்ள விவசாயிகள் பிரதமரின் கவுரவ நிதியுதவி திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் விவரங்களை உள்ளீடு செய்து ஓ.டி.பி. மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம். இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் வருகிற 30-ந் தேதிக்குள்(வௌ்ளிக்கிழமை) இ-சேவை மையங்கள், அஞ்சல் நிலையங்களை அணுகி தகுந்த விவரங்களை சமர்ப்பித்து பதிவு செய்து இத்திட்டத்தில் பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story