முத்துமாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா
திட்டச்சேரி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா நடந்தது
நாகப்பட்டினம்
திட்டச்சேரி:
நாகை மாவட்டம், திட்டச்சேரி வெள்ளத்திடலில் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா, கடந்த 10-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கஞ்சி வார்த்தல், சக்தி கரகம் எடுத்தல், பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் உள்பட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டன. இரவு அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நேற்று அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், தேன், திரவியம், மாப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும், வீதி உலாவும் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story