கோவில்களில் ஆடி திருவிழா


கோவில்களில் ஆடி திருவிழா
x

திருவேங்கடம் கோவில்களில் ஆடி திருவிழா நடந்தது.

தென்காசி

திருவேங்கடம்:

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டார பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் ஆடித் திருவிழா கொண்டாடப்பட்டது.

திருவேங்கடம் அடுத்துள்ள சத்திரப்பட்டியில் உள்ள காளியம்மன் கோவில்களிலும் ஆடித்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கும், பரிவார தேவதைகளுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவில் அம்மன் பூச்சபுரத்தில் வீதிஉலா நடைபெற்றது. இதேபோல் திருவேங்கடம் ஆவுடையாபுரம் சாலையில் உள்ள முப்புடாதி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடந்தது.

கலிங்கப்பட்டி பஞ்சாயத்து மகாதேவர்பட்டியில் உள்ள வடபத்திரகாளியம்மன் கோவில் ஆடித்திருவிழாவில் சிறப்பு அபிஷேக ஆராதனை, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இரவில் அம்மன் பூச்சப்பரத்தில் வீதி உலாவும் நடுச்சாம பூஜையும் நடைபெற்றது. பெண்கள் அக்னி சட்டி எடுத்தும் ஆயிரம் கண் பானை எடுத்தும் வேண்டுதல் நிறைவேற்றினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆலடிப்பட்டி, திருவேங்கடம் அடுத்துள்ள வாலிப்பட்டியில் காளியம்மன் கோவில் ஆடித்திருவிழா நடந்தது. அப்போது பெண்கள் மாவிளக்கு எடுத்தும், அக்னி சட்டி எடுத்தும் வழிபட்டனர்.


Next Story