மகாதேவ மலையில் ஆடி கிருத்திகை விழா


மகாதேவ மலையில் ஆடி கிருத்திகை விழா
x

மகாதேவமலையில் ஆடி கிருத்திகை விழா நடந்தது.

வேலூர்

ஆடி கிருத்திகை விழா

கே.வி.குப்பம் தாலுகா, காங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள மகாதேவ மலையில் ஆடி கிருத்திகை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மகானந்த சித்தர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆசிபெற்று சென்றனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இலவச பஸ் வசதி, இலவச வாகனங்கள் நிறுத்தும் இடம், சிறப்பு அன்னதானம் ஆகியவற்றை மகானந்த சித்தர் செய்து இருந்தார்.

இரவு வள்ளி, தெய்வானை உடனுறை முருகன் பூப்பல்லக்கு வண்ணமிகு மின் அலங்காரத்துடன் உலா வந்தது. நையாண்டி மேளம், கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இன்னிசை கச்சேரி

மகாதேவமலையில் இரவு இன்னிசை கச்சேரி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துரைசிங்காரம் தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு உறுப்பினர் சுந்தரி சிவகுமார், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கே.முனிசாமி, ஊராட்சி மன்ற தலைவர் சிவரஞ்சனி செந்தில்குமார், எம்.எல்.ஏ.க்கள் அணைக்கட்டு ஏ.பி.நந்தகுமார், குடியாத்தம் அமுலுவிஜயன், வேலூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் நா.அசோகன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, மாவட்ட கவுன்சிலர் எம்.அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகாநந்த சித்தர் இன்னிசை கச்சேரியை தொடங்கி வைத்தார்.

விழாவில் முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் கே.சீதாராமன், தொழிலதிபர்கள் பெங்களூரு ஸ்ரீராம், ஆம்பூர் சி.அனுரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். மகாநந்த சித்தர் தான தர்ம கல்வி அறக்கட்டளை தலைவர் கே.பாஸ்கர் நன்றி கூறினார்.

விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வி.டி.ஜெயக்குமார், கோவில் பணியாளர்கள், காங்குப்பம் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.


Next Story