பாலமுருகர் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா
கிருஷ்ணகிரி
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம் அருகே உள்ள வேங்கானூர் கிராமத்தில் பாலமுருகர் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி கங்கை பூஜை, சேவல் கொடி ஏற்றம், சாமிக்கு அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றன. விழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தியும், எலுமிச்சம்பழத்தை உடல் முழுவதும் கோர்த்தும், விமான அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இடும்பன் பூஜையுடன் திருவிழா நிறைவடைந்தது. விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story