சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு திரளான பக்தர்கள் குவிந்து கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
கிருத்திகை திருவிழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையை விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்து நேற்று முன்தினம் இரவு முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் பகுதியில் குவிந்தனர்.
இவ்விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது.
திருவிளக்கு பூஜை
காலை 4.30 விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. பின்னர் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. மாலையில் கோவில் உள்பிரகாரத்தில் திருவிளக்கு பூஜையும் நடந்தது.
ஆடி கீர்த்திகையை முன்னிட்டு திரளான பக்தர்கள் அதிகாலை முதல் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் கோவிலில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.