மாரியம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜை
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற ஆடி மாத சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சாத்தூர்,
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற ஆடி மாத சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாரியம்மன் கோவில்
சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிேஷகம் நடந்தது.
பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாதுகாப்பு பணி
ஆடி மாதம் வெள்ளிக்கிழமையையொட்டி தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் பக்தர்களின் பாதுகாப்புக்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கருணாகரன், அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.