மான்பூண்டி நல்லாண்டவர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா
மான்பூண்டி நல்லாண்டவர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா நடந்தது.
மணப்பாறை:
மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டி ஊராட்சியில் ஆண்டவர் கோவில் பகுதியில் மான்பூண்டி ஆற்றங்கரையில் மிகவும் பழமையான மான்பூண்டி நல்லாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருந்திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு திருவிழாவையொட்டி ஆடி 1-ந் தேதி பால்குட விழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஆடி முதல் வெள்ளிக்கிழமையன்று திருவிழா தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் முக்கிய திருவிழாவான ஆடி 4-ம் வெள்ளி திருவிழா இன்று நடைபெறுகிறது. இதைெயாட்டி காலை 9 மணிக்கு நல்லாண்டவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 9 மணிக்கு கிராமிய கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நள்ளிரவு 2.30 மணிக்கு நல்லாண்டவர் சுவாமி குதிரை வாகனத்தில் வீதி உலா மற்றும் திருக்கோவில் தெய்வங்கள் முத்துப்பல்லக்கில் திருவீதி உலா நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து ஆடி 5-ம் வெள்ளியன்று திருவிழா நடைபெறுகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 3-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் விமான பாலாலயம் செய்து கோவில் திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளது.