டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக்  கடைகளை அகற்ற வலியுறுத்தி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

குடியாத்தத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்

குடியாத்தம் நகர பா.ம.க. சார்பில் குடியாத்தம் தாலுகா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் காமராஜ், அரவிந்த், இளம்பரிதி, பிரதாப், தினகரன், ரவீந்திரன், ராமலிங்கம், கமல், முகமதுபாஷா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் எஸ்.குமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் என்.குமார், மாவட்ட அவைத்தலைவர் வெங்கடேசன், முன்னாள் மாநில துணை செயலாளர் ரமேஷ்நாயுடு, மாவட்ட பொருளாளர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் குடியாத்தம் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள காமராஜர் பாலம் மற்றும் நேதாஜி சவுக் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். குடியாத்தம் பிச்சனூர் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் கங்காதரசுவாமி நகராட்சி நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். விசைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் கூலியுடன் கூடுதலாக 30 சதவீதம் கூலி உயர்த்தி வழங்க வேண்டும். கவுண்டன்யா மகாநதி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க தமிழக அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story