காவிரி ஆற்றுக்கு ஆரத்தி
காவிரி ஆற்றுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது.
கரூர்
அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை இணைந்து 12-ம் ஆண்டு காவிரி விழிப்புணர்வு தீர்த்த ரத யாத்திரையை கடந்த மாதம் 21-ந்தேதி கர்நாடக மாநிலம் குடகுமலை காவிரியில் தொடங்கியது. தொடர்ந்து காவிரி ஆறு பாயும் மாவட்டங்களில் யாத்திரையை மேற்கொண்டனர். பின்னர் பல்வேறு மாவட்டங்கள் வழியாக சென்ற இந்த யாத்திரை நேற்றுமுன்தினம் கரூர் மாவட்டம் வந்தடைந்தது. இந்நிலையில் நேற்று மாலை கரூர் அருகே உள்ள நெரூரில் காவிரி ஆற்றங்கரையில் காவிரி அம்மனுக்கு யாகம் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து காவிரி ஆற்றுக்கு மகாஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு தரிசித்து சென்றனர்.
Related Tags :
Next Story