பணிக்கம்பட்டியில் சிறப்பு ஆதார் முகாம்


பணிக்கம்பட்டியில் சிறப்பு ஆதார் முகாம்
x

பணிக்கம்பட்டியில் சிறப்பு ஆதார் முகாம்

திருப்பூர்

பல்லடம்


பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி சமுதாய நலக்கூடத்தில், பல்லடம் தபால் அலுவலகம் மற்றும் பணிக்கம்பட்டி தபால் அலுவலகம் ஆகியவை இணைந்து நடத்திய சிறப்பு ஆதார் முகாம் நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் எடுத்தனர். மேலும் பலர் ஆதாரில் பெயர், முகவரி, பிறந்த தேதி, செல்போன் நம்பர் ஆகியவற்றை திருத்தம் செய்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ரோஜாமணி, வார்டு உறுப்பினர்கள், தபால் அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் இரண்டு நாட்கள் இந்த சிறப்பு முகாம் நடைபெறும் என தபால் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.



Next Story