ஆவின் பால் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனை-கோர்ட்டில் வழக்கு தொடர நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் முடிவு


ஆவின் பால் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனை-கோர்ட்டில் வழக்கு தொடர நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் முடிவு
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் ஆவின் பால் விலை கூடுதலாக விற்பனை செய்யப்படுவது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம் என்று நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் தெரிவித்தனர்.

நீலகிரி

குன்னூர்

நீலகிரியில் ஆவின் பால் விலை கூடுதலாக விற்பனை செய்யப்படுவது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம் என்று நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் தெரிவித்தனர்.

நுகர்வோர் சங்க கூட்டம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.இதற்கு துணைத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். லட்சுமி நாராயணன் வரவேற்றார். செயலர் ஆல்துரை அறிக்கை வாசித்தார். இதை தொடர்ந்து நுகர்வோர் சங்கத்தினர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் குறைத்து வருவது வேடிக்கையாக இருக்கிறது. மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பயண அட்டைகளின் எண்ணிக்கையும் 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பயணிகளை மிகுந்த இன்னலுக்கு ஆளாக்கி வருகிறது.

கூடுதல் பஸ்கள்

இதனால் மக்கள் அரசின் மீது அதிருப்தி அடைந்து உள்ளனர். சமீபகாலத்தில் டிரைவர் மற்றும் கண்டக்டர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் பஸ்கள் இயக்குவதில் சிக்கல் இருப்பதாக தெரிகிறது. முழுவதும் அரசு பஸ்களே இயங்குவதால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

எனவே அரசு போக்குவரத்து கழகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களில் ஆவின் பால் பொருட்கள் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் நீலகிரியில் மட்டும் கூடுதல் விலைக்கு விற்கப்படுவது இந்த மாவட்ட மக்களை சுரண்டும் செயல் ஆகும். எனவே இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர். முடிவில் தர்மசீலன் நன்றி கூறினார்.


Next Story