ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.7 லட்சம் அபேஸ்
ஓசூரில் ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.7 லட்சம் அபேஸ் செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூரில் ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.7 லட்சம் அபேஸ் செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் நிறுவன ஊழியர்
ஓசூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் சின்னப்பராஜ் (வயது 64). இவர் ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர். கடந்த 12.07.2022 அன்று இவரது மெயிலுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அந்த தகவலில், அவர் அமெரிக்காவில் இருப்பதாகவும், தான் இந்தியாவில் உள்ள ஏழை குழந்தைகளுக்கும், டிரஸ்ட்களுக்கும் உதவ உள்ளதாகவும், 2 மில்லியன் டாலர்கள் இதற்காக ஒதுக்கி உள்ளதாகவும் கூறினார்.
அந்த பணத்தை தான் டாலராக தான் அனுப்ப முடியும். அதை பணமாக மாற்றுவதற்கான கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டும் என கூறினார். அதை நம்பி சின்னப்பராஜ், தான் வைத்திருந்த ரூ.6 லட்சத்து 98 ஆயிரத்து 900-ஐ அந்த நபர் கூறிய வங்கி கணக்குகளில் செலுத்தினார்.
விசாரணை
இதை தொடர்ந்து சின்னப்பராஜ் அந்த நபரை தொடர்பு கொண்ட போது அவர் பேசுவதை தவிர்த்தார். இதைத் தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சின்னப்பராஜ், கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.