17 வயது சிறுமியை கடத்திச்சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
அந்தியூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை காணவில்லை என்று அவருடைய பெற்றோர் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடிவந்தனர். இந்தநிலையில் தேடப்பட்டு வந்த சிறுமி அந்தியூர் பஸ் நிலையத்தில் ஒரு வாலிபருடன் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் சிறுமியுடன் இருந்தவர் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த அஸ்வின் ஜார்ஜ் (22) என்பவர் என்றும். அவர் காரமடையில் உள்ள சித்தி வீட்டில் தங்கிக்கொண்டு நூற்பாலைக்கு வேலைக்கு சென்று வந்தபோது அங்கு வேலை பார்த்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அஸ்வின் ஜார்ஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். சிறுமி பெற்றோருடன் ஒப்படைக்கப்பட்டார்.