அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
நெல்லை நூலகத்தில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் தாமிரபரணி வாசகர் வட்டத்தின் சார்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழா நடந்தது. புரவலர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வாசகர் வட்ட தலைவர் சரவணகுமார் வரவேற்று பேசினார். நூலக உறுப்பினர்கள் சதாசிவம், செய்யது இஸ்மாயில் ஆகியோர் வாழ்த்தி பேசினர். புரவலர் நல்லசிவன் தீபாவளி மலர் புத்தகத்தை நூலகத்துக்கு வழங்கினார். அலங்கரிக்கப்பட்ட அப்துல் கலாம் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. கிளை நூலகர் அகிலன் முத்துகுமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story