மேலப்பாளையம் மண்டல பகுதியில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆய்வு


மேலப்பாளையம் மண்டல பகுதியில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆய்வு
x

மேலப்பாளையம் மண்டல பகுதியில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை மேலப்பாளையம் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, 50, 52-வது வார்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு தேவையான ஆரம்ப சுகாதார நிலையம், கழிவுநீர் ஓடை, அனைத்து தெருக்களிலும் சாலை வசதி, கன்னிமார்குளக்கரையில் உள்ள கருவேல மரங்களை அகற்றுதல், குளத்தில் கலக்கும் கழிவுநீர் ஓடையை தனி கால்வாய் கட்டி விட வேண்டும் என்று கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தனர்.

பின்னர் பஜார் திடல் அருகில் பள்ளிக்கூடத்துக்கு செல்ல திண்ணையில் காத்திருந்த மாணவர்களிடம் சென்று அவர்களுடன் அமர்ந்து நலம் விசாரித்து குறைகளை கேட்டனர். தொடர்ந்து மேலப்பாளையம் ஆமீம்புரம் மாநகராட்சி ஆரம்ப பள்ளிக்கு சென்று அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்ய உத்தரவிட்டனர். தொடா்ந்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர். மேலும் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்கள். இந்த ஆய்வின் போது, மேலப்பாளையம் மண்டல தலைவர் கதீஜா இக்லாம் பாசிலா, கவுன்சிலர்கள் ரசூல் மைதீன், நித்திய பாலையா, நகர செயற்பொறியாளர் நாராயணன், உதவி ஆணையாளர் அய்யப்பன், சுகாதார அலுவலர் சாகுல் அமீது உள்ளிட்டோர் உடன் சென்றனர்.


Next Story