நகை அடகு வைத்த ரூ.3 லட்சம் அபேஸ்
நகை அடகு வைத்த ரூ.3 லட்சத்தை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிவிட்டனர்.
மதுரை
மதுரை கொடிக்குளத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் தனது மனைவியுடன் ஒத்தக்கடையில் உள்ள ஒரு வங்கியில் நகையை அடகு வைக்க சென்றார். அங்கு 10 பவுன் நகையை அடகு வைத்து 2 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் பெற்றார். பின்பு வங்கியின் வாசல் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் உள்ள பையில் பணத்தை வைத்து புறப்பட தயாரானார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிவிட்டனர். உடனே ராஜா தனது மோட்டார் சைக்கிளில் அவர்களை பின் தொடர்ந்து சென்றும் அவர்களை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story