கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினம்


கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினம்
x
தினத்தந்தி 10 Feb 2023 12:15 AM IST (Updated: 10 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட தொழிலாளர் நலத்துறையின் சார்பில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை பஸ்நிலையத்தில் கையெழுத்து இயக்கம் தொடக்கவிழா மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதையொட்டி கலெக்டர் கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார். பின்னர் பஸ் நிலையத்தில் இருந்த பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழியினை கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் எடுத்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பரமேஸ்வரி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ராஜ்குமார், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப்பாதுகாப்புத் திட்டம்) கோட்டீஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story