வயதான தந்தையை பராமரிக்க தவறிய மகனின் சொத்து உரிமைகள் ரத்து
வயதான தந்தையை பராமரிக்க தவறிய மகனின் சொத்து உரிமைகளை ரத்து செய்து கும்பகோணம் கோட்டாட்சியர் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
வீட்டை விட்டு வெளியேற்றினார்
இந்தநிலையில் வைத்தியலிங்கம் தனது தந்தை சண்முகத்திடமிருந்து சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வாங்கிக்கொண்டு தனது தந்தையை முறையாக பராமரிக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருநீலக்குடி போலீசார் மற்றும் திருவிடைமருதூர் போலீசாரிடம் சண்முகம் புகார் கொடுத்த நிலையில் போலீசார் வைத்தியலிங்கத்திற்கு அறிவுரை கூறி தந்தையை முறையாக பார்த்துக் கொள்ளுமாறு அனுப்பியுள்ளனர். ஆனாலும் வைத்தியலிங்கம் தொடர்ந்து சண்முகத்தை துன்புறுத்தி அவரை வீட்டை விட்டு வெளியேற்றியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சண்முகம் இதுகுறித்து கும்பகோணம் கோட்டாட்சியரிடம் புகார் கொடுத்தார்.
சொத்து ரத்து
புகாரின்பேரில், கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, கும்பகோணம் தாசில்தார் மற்றும் தஞ்சை மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், வைத்தியலிங்கம் தனது தந்தையின் சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு அவரை முறையாக பராமரிக்காமல் துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியது உண்மை என தெரிய வந்தது. இதுகுறித்து கோட்டாட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் சண்முகத்திடம், வைத்தியலிங்கம் எழுதி வாங்கிய உயில் பத்திரத்தை ரத்து செய்து கோட்டாட்சியர் லதா அதிரடி நடவடிக்கை எடுத்தார். பின்னர் அந்த சொத்தின் ஆவணங்களை சண்முகத்திடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது.