வேப்பூர் பகுதி மருந்து கடைகளில் கருக்கலைப்பு?


வேப்பூர் பகுதி மருந்து கடைகளில் கருக்கலைப்பு?
x
தினத்தந்தி 2 Aug 2023 12:15 AM IST (Updated: 2 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேப்பூர் பகுதி மருந்து கடைகளில் கருக்கலைப்பு செய்யப்படுகிறதா? என்று டாக்டர் குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர்.

கடலூர்

ராமநத்தம்:

வேப்பூர் பகுதியில் உள்ள மருந்து கடைகளில் டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாகவும், சட்டவிரோத கருக்கலைப்பு நடைபெறுவதாகவும் சுகாதாரத்துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து வேப்பூர் அரசு தலைமை மருத்துவ மனை தலைமை டாக்டர் அகிலன், மருந்தக ஆய்வாளர் நாராயணசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் மருந்து கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

டாக்டர் குழுவினர் எச்சரிக்கை

டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிறதா?, மருந்து கடைகளிலேயே கருக்கலைப்பு செய்யப்படுகிறதா? என்று சோதனை செய்தனர்.

மேலும், டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரைகள் விற்பனை செய்யக்கூடாது என்று டாக்டர் குழுவினர் எச்சரிக்கை விடுத்தனர். யாரேனும் கருக்கலைப்பு மாத்திரைகள் கேட்டு வந்தால் வேப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.


Next Story