கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம் தொடங்கியது


கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம் தொடங்கியது
x

கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

வேலூர்

தேசிய விலங்கியல் நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 4 முதல் 8 மாதத்துக்கு உட்பட்ட கிடேரி கன்றுகள், எருமை கிடேரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் வராமல் இருப்பதற்கான தடுப்பூசி போடும் பணி நேற்று வேலூர் மாவட்டத்தில் தொடங்கியது. வல்லண்டராமம் கிராமத்தில் தொடங்கிய முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை வேலூர் மாவட்ட துணை இயக்குனர் அந்தூவன், கால்நடை நோய் புலனாய்வுபிரிவு துணை இயக்குனர் ஜெயஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேலூர் மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கி தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து டாக்டர்கள் தமிழ்செல்வன், லாவண்யா ஆகியோர் தலைமையிலான குழுவினர் கிடேரி கன்றுகள், எருமை கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

இந்த முகாம் வருகிற 28-ந் தேதி கால்நடை மருத்துவமனைகளில் நடைபெற உள்ளது.

அதைத்தவிர மருத்துவக்குழுவினர் கிராமங்கள் தோறும் சென்று முகாமிட்டு கன்றுகளுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட உள்ளனர். கால்நடை வளர்ப்போர்கள் அரசால் அறிவிக்கப்படுகின்ற கால்நடை சம்பந்தப்பட்ட திட்ட பயன்கள் எளிதில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து கால்நடை வளர்ப்போர் தங்களிடம் உள்ள கிடேரி கன்றுகள் மற்றும் எருமை கன்றுகளுக்கு கருச்சிதைவு தடுப்பூசி போட்டுக் கொள்வதுடன் காதுவில்லைகளை தடுப்பூசி போடப்பட்ட கன்றுகளுக்கு பொறுத்தி கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Next Story