மண்புழு உரம் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
கம்பம் அருகே மண்புழு உரம் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தேனி
மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் தேனி மாவட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு சென்று விவசாயம் மற்றும் தோட்டக்கலை சாகுபடிகள் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடி பயிற்சி எடுத்து வருகின்றனர். அதன்படி, மதுரை வேளாண் கல்லூரி இளநிலை நான்காம் ஆண்டு மாணவிகள் ஓவியப்பிரியா, மஞ்சிமா அணில் தலைமையில் கல்லூரி மாணவிகள் கம்பம் அருகே உள்ள உத்தமபுரம் கிராமத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் மண்புழு உரம் தயாரிப்பது, அதன் பயன்கள் மற்றும் வாழையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story