வாழைப்பயிர் துல்லிய பண்ணையம்குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்


வாழைப்பயிர் துல்லிய பண்ணையம்குறித்து  விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

வாழைப்பயிர் துல்லிய பண்ணையம்குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி சார்பில் பேய்குளத்தில் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் வாழை பயிர் மற்றும் காய்கறி பயிரில் துல்லிய பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. பயிர் வினையியல் பேராசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கி துல்லிய பண்ணையம் குறித்து பேசினார். கள உதவியாளர் தங்க லட்சுமி வாழைக்கரனை விதை நேர்த்தி மற்றும் பூச்சி நோய் கட்டுபாடு பற்றி பேசினார். இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கள உதவியாளர் சின்னதுரை நன்றி கூறினார்.


Next Story