பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்


பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து  ஆலோசனை கூட்டம்
x

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் நடந்தது.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில், பாதிக்கப்பட்ட மற்றும் பராமரிப்பு இன்றி தெருவில் விடப்படும் விலங்குகளுக்கு பாதுகாப்பு அளித்தல், மனிதாபிமான முறையில் விலங்குகளை கொண்டு செல்வதை உறுதி செய்தல், தெருவில் சுற்றித்திரியும் நாய், பூனைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துதல் போன்றவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சுப்பையா பாண்டியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story