தூத்துக்குடிகுறித்து சமூகவலைதளத்தில் அவதூறு வீடியோவெளியிட்ட 11மாணவர்களுக்கு அறிவுரை


தூத்துக்குடிகுறித்து  சமூகவலைதளத்தில் அவதூறு வீடியோவெளியிட்ட 11மாணவர்களுக்கு அறிவுரை
x
தினத்தந்தி 23 Nov 2022 12:15 AM IST (Updated: 23 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடிகுறித்து சமூகவலைதளத்தில் அவதூறு வீடியோவெளியிட்ட 11மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு வீடியோ வெளியிட்ட 11 மாணவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.

அவதூறு வீடியோ

தூத்துக்குடி மாவட்டத்தை குறிக்கும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட் மற்றும் பூங்காக்களிலும் தவறான செய்கைகளை காட்டி, மாவட்டத்தை தவறாக சித்தரித்து அவமதிக்கும் வகையில் சில மாணவர்கள் வீடியோ பதிவிட்டு அதனை வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பரவ விட்டனர்.

இந்த வீடியோ பதிவு கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

மாணவர்கள்

இந்த நிலையில் தூத்துக்குடி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் தீவிர விசாரணை நடத்தி, அந்த சம்பவங்களில் ஈடுபட்ட 11 மாணவர்களை அடையாளம் கண்டறிந்தனர். அவர்களை பிடித்து எச்சரிக்கை விடுத்தும், உரிய அறிவுரைகளை வழங்கியும் அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து 11 மாணவர்களும் மீண்டும் செல்பி பாயிண்ட் முன்பு வரிசையாக நின்று தங்கள் செயலுக்கு மன்னிப்பு கோரியும், இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று கூறியும் அந்த மாணவர்கள் வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டு உள்ளனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story