தொளசம்பட்டி அப்ரமேய பெருமாள் கோவில் தேரோட்டம்
தொளசம்பட்டி அப்ரமேய பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.
சேலம்
ஓமலூர்:
ஓமலூரை அடுத்த ெதாளசம்பட்டியில் அப்ரமேய பெருமாள் கோவில் தேரோட்ட திருவிழா கடந்த 21-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் சாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று சுவாமி தேரில் எழுந்தருளினார். தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இன்றும் (சனிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேர் நிலையை வந்தடைகிறது. நாளை மறுநாள் சத்தாபரணமும், 31-ந் தேதி மஞ்சள் நீராட்டுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 1-ந் தேதி உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது.
Next Story