கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது
பாப்பாக்குடி அருகே கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி
முக்கூடல்:
பாப்பாக்குடி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த வழக்கில் சிவகாமிபுரம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த சுப்பிரமணியன் (44) என்பவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 1½ மாதமாக தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு கோர்ட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் சுப்பிரமணியனை பாப்பாக்குடி போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.
Related Tags :
Next Story