கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது
நெல்லையில் கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி
நெல்லை அருகே சீவலப்பேரி மடத்துப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 66). இவரை சீவலப்பேரி போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் கடந்த ஒரு மாதமாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனையடுத்து அவருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில், சீவலப்பேரி போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.
Related Tags :
Next Story