கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவான தொழிலாளி கைது


கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவான தொழிலாளி கைது
x

கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவான தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் அருகே பழதோட்டம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 34). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான கதிரேசன் என்பவருக்கும் இடையே கடந்த 2020-ம் ஆண்டு தகராறு ஏற்பட்டது. இதில் ஆனந்தகுமார், கதிரேசனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து கதிரேசன் அருவங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் ஆனந்தகுமார் மீது தாக்குதல், கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ஆனந்தகுமாரை போலீசார் கைது செய்து, குன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதன்பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ஆனந்தகுமார் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் குன்னூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதைதொடர்ந்து வெலிங்டன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், அருவங்காடு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் மற்றும் போலீசார் ரமேஷ், ஆனந்தராமன் ஆகியோர் தலைமறைவான ஆனந்தகுமாரை கைது செய்தனர். பின்னர் குன்னூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story