கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது


கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
x

பாளையங்கோட்டை அருகே கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை அருகே உள்ள உடையங்குளத்தை சேர்ந்தவர் பூல்பாண்டி (வயது 22). இவர் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் பாளையங்கோட்டை தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பிறகு பூல்பாண்டி கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 10 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இதையொட்டி அவருக்கு கோர்ட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பூல்பாண்டியை, தாலுகா போலீசார் நேற்று கைது செய்து பிடியாணை நிறைவேற்றி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


Next Story