மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த ஏ.சி. மெக்கானிக் சாவு
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த ஏ.சி. மெக்கானிக் இறந்தார்.
புதுக்கோட்டை
கீரமங்கலம்:
கீரமங்கலம் மேற்கு கிராமத்தை சேர்ந்த சிவஞானம் மகன் சிற்றரசு (வயது 35). ஏ.சி மெக்கானிக். சம்பவத்தன்று பேராவூரணியில் இருக்கும் மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கரம்பக்காடு கிராமத்தின் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து அவர் படுகாயமடைந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சிற்றரசு பரிதாபமாக இன்று உயிரிழந்தார். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story