செல்போனில் விடுத்த கோரிக்கையை ஏற்று பூச்சிக்காடு கிராமத்தில் லாரி மூலம் இலவச குடிநீர் வினியோகம்: கனிமொழி எம்.பி. ஏற்பாடு


தினத்தந்தி 14 Sept 2023 12:15 AM IST (Updated: 14 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

செல்போனில் விடுத்த கோரிக்கையை ஏற்று பூச்சிக்காடு கிராமத்தில் லாரி மூலம் இலவச குடிநீர் வினியோகத்துக்கு கனிமொழி எம்.பி. ஏற்பாடு செய்தார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் யூனியன் தாமரைமொழி ஊராட்சிக்கு உட்பட்ட ஆனந்தன்விளை பூச்சிக்காடு கிராம மக்கள் குடிநீர் பிரச்சினையால் அல்லாடி வந்தனர். இக்கிராம மக்கள் நேற்று கனிமொழி எம்.பி.யை செல்போனில் தொடர்பு கொண்டு, தங்களுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்த எம்.பி., அந்த கிராம மக்களுக்கு நேற்று முதல் 2நாட்களுக்கு ஒருமுறை லாரியில் இலவசமாக குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்தார். நேற்று லாரிமூலம் குடிநீர் வினியோகம் தொடக்க நிகழ்ச்சியில் சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் பாலமுருகன், தாமரைமொழி ஊராட்சி தலைவர் சாந்தா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தங்கள் கோரிக்கையை ஏற்று உடனடியாக லாரி மூலம் இலவசமாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்த கனிமொழி எம்.பி.க்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.


Next Story