அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு


அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு
x

மனித உரிமைகள் தினத்தையொட்டி அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா தலைமையில் அரசு ஊழியர்கள் மனித உரிமை தின உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், கலெக்டர் அலுவலக மேலாளர் வெங்கடாச்சலம், பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். நெல்லை மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி உதவி ஆணையாளர் (கணக்கு) சொர்ணலதா தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.


Next Story