போதைப்பொருளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு


போதைப்பொருளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு
x

போதைப்பொருளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது

நாகப்பட்டினம்

வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். வாய்மேடு போலீஸ் அதிகாரி அருள்மொழி தேவன் முன்னிலை வகித்தார். அப்போது மாணவ, மாணவிகள் அனைவரும் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இதேபோல தகட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருளுக்கு எதிராக பள்ளியின் தலைமை ஆசிரியர் தனக்குமார் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆயக்காரன்புலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பழனியப்பன் தலைமையில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.





Next Story