குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு
கட்டிமேடு அரசுப்பள்ளியில் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாலு தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட மாணவர்கள் இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன், தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன், தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் என உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர். உறுதிமொழியை பட்டதாரி ஆசிரியை ஜா.வேம்பு வாசிக்க அனைத்து மாணவ மாணவிகளும் உறுதிமொழி ஏற்றனர்.