பொறுப்பு ஏற்பு


பொறுப்பு ஏற்பு
x
தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக செல்வராஜ் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த செந்தில்குமார் திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.இதை தொடர்ந்து சென்னையில் போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வராக இருந்த செல்வராஜ் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து புதிய போலீஸ் சூப்பிரண்டாக செல்வராஜ் நேற்று மதியம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் மற்றும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், ஜானகிராமன் மற்றும் போலீசார் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பொறுப்பேற்றுக் கொண்டவுடன் சிராவயலில் இன்று நடைபெற உள்ள மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் நேரில் சென்று பார்வையிட்டார்.


Next Story