சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் பதவி ஏற்பு


சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் பதவி ஏற்பு
x

நெல்லை மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் பதவி ஏற்றுக் கொண்டார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனராக இருந்த கிருஷ்ண லீலா இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்று சென்னைக்கு மாறுதலாகி சென்று விட்டார். அவருக்கு பதிலாக சென்னை நகராட்சிகள் நிர்வாக இயக்குனரகத்தில் பணிபுரிந்து வந்த டாக்டர் ராஜேந்திரன் நெல்லை மாவட்ட சுதாகார நலப்பணிகள் துணை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

அவர் நேற்று பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் உள்ள சுகாதரத்துறை அலுவலகத்தில் துணை இயக்குனராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஊழியர்கள், அலுவலர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இதை தொடர்ந்து ராஜேந்திரன் கலெக்டர் விஷ்ணுவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

காய்ச்சல் பரவுவது குறித்து அவரிடம் கேட்டபோது, ''பொது மக்கள் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் கொரோனா காலத்தை போல் முக கவசம் அணிந்து கொள்வது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவும் பழக்கத்தை தொடர வேண்டும். குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும், சுகாதாரத்தை பேண வேண்டும்'' என்றார்.

முன்பு இவர் நெல்லை மாநகராட்சி நல அலுவலராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story