நெல்லை மின் பகிர்மான வட்ட புதிய மேற்பார்வை பொறியாளர் பதவி ஏற்பு
நெல்லை மின் பகிர்மான வட்ட புதிய மேற்பார்வை பொறியாளர் பதவி ஏற்றுக் கொண்டார்.
திருநெல்வேலி
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நெல்லை மின் பகிர்மான வட்டத்தின் புதிய மேற்பார்வை மின் பொறியாளராக, மதுரையில் செயற்பொறியாளராக பணியாற்றி பதவி உயர்வு பெற்ற குருசாமி நியமிக்கப்பட்டார்.
புதிய மேற்பார்வை பொறியாளர் குருசாமி நேற்று பதவி ஏற்றார். அவரிடம் செயற்பொறியாளர் வெங்கடேஷ்மணி பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் ஷாஜகான், முத்துக்குட்டி, உதவி செயற்பொறியாளர்கள் சார்லஸ் நல்லதுரை, எட்வர்டு பொன்னுசாமி, தங்கமுருகன், சின்னசாமி, சங்கர், துணை நிதி கட்டுப்பாட்டு அலுவலர் வீரலட்சுமணன், உதவி கணக்கு அலுவலர் ராஜசேகர் மற்றும் மின்சார வாரிய அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story