நீதிமன்றங்களில் அம்பேத்கரின் புகைப்படங்கள் அகற்றக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்பு
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை சந்தித்து அமைச்சர் ரகுபதி ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;
நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படும் என்ற செய்தி பரவியதை தொடர்ந்து, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலாவை சந்தித்து இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர், அம்பேத்கர் படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டினை கடிதம் மூலமாக தலைமை நீதிபதியிடம் அமைச்சர் வழங்கினார்.
தமிழக அரசின் நிலைப்பாட்டினை கேட்டறிந்த தலைமை நீதிபதி, நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படங்களையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை என்றும், தற்போதைய நடைமுறையே தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் வழக்கறிஞர் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என கூறப்பட்டுள்ளது.